ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் : அநுரவுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்
ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்த விசாரணைகளை அநுர (Anura) அரசாங்கம் மீள ஆரம்பிக்க வேண்டும் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு 24 சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த விடயம் குறித்து அவர்கள் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஜனாதிபதியாக, இலங்கையின் அரசியல் அமைப்பினாலும் ஐசிசிபிஆரினாலும் (ICCPR) பாதுகாக்கப்பட்டுள்ள ஊடக சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமைகளை உறுதி செய்யுமாறு உங்களை நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.
தேர்தல் விஞ்ஞாபனம்
ஊடக சுதந்திரத்தை உறுதி செய்வது மற்றும் பத்திரிகையாளர்களிற்கு எதிரான கடந்த கால குற்றங்களிற்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்வது ஆகியவை குறித்த தேசிய மக்கள் சக்தியின் வாக்குறுதிகளை நாங்கள் வரவேற்கினறோம்.
தேசிய மக்கள் சக்தியின் (NPP) தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஊடகவியலாளர்களிற்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்த விசாரணைகளை மீள ஆரம்பிக்கவேண்டும், அல்லது இந்த சம்பவம் குறித்து பொறுப்புக்கூறலிற்காக உடனடி பக்கச்சார்பற்ற வெளிப்படையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |