சர்வதேச கடன் வழங்குநர்களால் தடைப்படும் இலங்கைக்கான கடன்!

International Monetary Fund Sri Lanka Economic Crisis Sri Lanka Dollars
By Kalaimathy Jan 10, 2023 10:46 AM GMT
Report

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக அரச சொத்துக்களை விற்பனை செய்ய முடியாமல் திணறி வரும் இலங்கைக்கு, நாட்டின் கடனை செலுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சர்வதேச அளவில் செல்வாக்குடைய முதலீட்டாளர்களின் வலுவான எதிர்மறையான கருத்துக்கள் காரணமாக, உதவிகள் கிடைக்காமல் தடுக்கப்பட்டுள்ளதாக உலகம் முழுவதிலும் உள்ள பொருளாதார மற்றும் அபிவிருத்தி நிபுணர்கள் குழு வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தை சீரமைக்க, கடனை தீவிரமான முறையில் குறைக்க வேண்டும் என சர்வதேச ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேசத்துடன் போராடும் நிலையில் இலங்கை

சர்வதேச கடன் வழங்குநர்களால் தடைப்படும் இலங்கைக்கான கடன்! | Investors Not Help Economic Crisis In Sri Lanka

உலகளாவிய கடன் நெருக்கடியை எதிர்கொள்ள சர்வதேச சமூகத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்த இலங்கை போராட வேண்டியிருக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"புவிசார் அரசியல் சூழ்ச்சிகள் ஒருபுறம் இருக்க, இலங்கையின் அனைத்து கடன் வழங்குநர்களும் தற்போதைய நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கு போதுமான அளவு கடனைக் குறைக்க வேண்டும்" என்பது அவர்களின் பரிந்துரையாக அமைந்துள்ளது.

சர்வதேச பொருளாதார நிபுணர் ஆச்சாரினி ஜயாதி கோஷ், பரிஸில் உள்ள பொருளாதார பல்கலைக்கழக பேராசிரியர் தோமஸ் பிகெட்டி, கிரீஸின் முன்னாள் நிதியமைச்சர் யானிஸ் வரூபாகிஸ் உள்ளிட்ட 182 பேரின் கையெழுத்துக்கள் கொண்ட கடிதத்தில், முதலீட்டு நிறுவனங்கள் உட்பட தனியார் துறை கடன் வழங்குபவர்களே, கடன் தொடர்பான ஒப்பந்தத்தை அடைவதில் தடையாக செயற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிக தவணைகளில் வசூல்

சர்வதேச கடன் வழங்குநர்களால் தடைப்படும் இலங்கைக்கான கடன்! | Investors Not Help Economic Crisis In Sri Lanka

இலங்கையின் கடன் பேச்சுவார்த்தைகள் இப்போது முக்கியமான கட்டத்தில் உள்ளன என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விரைவில் அதிக நிதியை வழங்குவதற்கான உத்தரவாதத்தை வழங்கும் வகையில், அனைத்து கடன் வழங்குநர்களும், இருதரப்பு, பலதரப்பு மற்றும் தனியார், மறுசீரமைப்பின் சுமைகளை சுமக்க வேண்டும்.

இலங்கையின் வெளிநாட்டுக் கடனில் 40% தனியார் கடனாளிகளுக்கு சொந்தமானது. அவற்றில் பெரும்பாலானவை சர்வதேச இறையாண்மை பத்திரங்கள். அதிக வட்டி வீதங்கள் காரணமாக அவர்கள் 50%ற்கும் அதிகமான வெளிநாட்டு கொடுப்பனவுகளைப் பெறுவதாக நிபுணர் குழு வாதிடுகிறது. அத்தகைய கடனளிப்பவர்கள் இலங்கைக்கு கடன் வழங்குவதில் தங்களின் ஆபத்தை தடுக்க அதிக தவணைகளை வசூலித்து பெரும் இலாபம் ஈட்டியதோடு, இது கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை முதல் முறையாக கடன் தவணையை செலுத்தாமைக்கு வழி வகுத்தது.

ஆபத்தான தவணைகள் மூலம் அதிக இலாபம் ஈட்டிய கடனாளிகள் அந்த அபாயத்தின் விளைவுகளைச் சுமக்க வேண்டும். பொருளாதார நெருக்கடி காரணமாக கடனை மீள செலுத்தாத நிலையில், சிங்கள தமிழ் புத்தாண்டு காலத்தில், இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட கடன் வழங்குநர்களுடன் இலங்கை பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் வாக்குறுதி

சர்வதேச கடன் வழங்குநர்களால் தடைப்படும் இலங்கைக்கான கடன்! | Investors Not Help Economic Crisis In Sri Lanka

சர்வதேச நாணய நிதியத்தினால் வாக்குறுதியளிக்கப்பட்ட 2.9 பில்லியன் டொலர் கடன் பொதி இலங்கையின் கடனை மீள செலுத்துவதற்கான நிலைமையை பேணும் பட்சத்தில் மாத்திரமே கிடைக்கும்.

தனியார் கடன் வழங்குநர்களின் கடுமையான நிலைப்பாட்டினால் இலங்கைக்கு பாதகமான பரிவர்த்தனைகளே கிடைக்கும் என நிபுணர்கள் குழு அச்சம் வெளியிட்டுள்ளது.  

ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்