நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் - ரணில் வலியுறுத்தல்
நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் இளைஞர்களின் பங்களிப்பு அத்தியாவசியமானதென அதிபர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இத்தீர்வு அடுத்த 25 வருடங்களை கருத்திற் கொண்டதாக அமைய வேண்டுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இன்று (11) கொழும்பு றோயல் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இளைஞர்களின் பங்களிப்பு
மேலும் உரையாற்றிய அவர், “நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைக்கும் அப்பால் சென்று இளைஞர்களின் எதிர்காலத்திற்காக நாட்டைத் தயார்படுத்த நான் தீர்மானித்துள்ளேன்.
இளைஞர் சந்ததியினருக்கு உதவும் வகையில் அடுத்த 25 ஆண்டுகளுக்குப் பொருந்தும் வகையில், டிஜிட்டல் அபிவிருத்தியுடன் கூடிய எதிர்காலத்திற்கு ஏற்ற தீர்வுகள் குறித்தே நாம் கவனத்திற் கொள்ளவேண்டும்.
அதற்கமைய நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிக்கு தீர்வு காணும் முகமாக மேற்பார்வைக்குழுக்களுக்கு இளைஞர்களை நியமிப்பதற்கு அவசியமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
75ஆவது சுதந்திர தின நிகழ்வு
2023 ஆம் ஆண்டில் கொண்டாடப்படவுள்ள 75ஆவது சுதந்திர தின நிகழ்வுடன் இணைந்ததாக இளைஞர்களுக்கான தேசிய அடித்தளமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக இளைஞர்களை அதில் இணைந்து கொள்ளுமாறு அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.
உலகளாவிய நெருக்கடியான காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்தைக் கருத்திற்கொண்டு, அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட காலநிலை மாற்றம் தொடர்பான நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் அர்த்தமுள்ள செயற்பாட்டுக்கு வழிவகுக்குமாறும் அதிபர் இளைஞர்களைக் கேட்டுக்கொண்டார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்
