அதிரடி காட்டிய இலங்கை வீரர் - ஐபில் தொடரின் 2 போட்டிகள் இன்று
ஐபில் தொடரின் இரண்டாவது போட்டி இன்றைய தினம் பஞ்சாப்பில் இடம்பெற்றது.
இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 20 ஓவர் நிறைவில் 191/5 ஓட்டங்களை பெற்றது.
பானுக்க ராஜபக்ச அரைசதம்
பஞ்சாப் அணி சார்பில் பானுக்க ராஜபக்ச 32 பந்துகளில் அரைசதம்(50) கடந்தார்.
இதனை தொடர்ந்து 192 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி, 146/7 ஓட்டங்களை பெற்றிருந்த வேலை போட்டி மழை காரணமாக, DLS முறைப்படி வழங்கப்பட்டு பஞ்சாப் அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டியில் கொல்கத்தா அணி சார்பில் அதிகபட்சமாக அன்ரு ரசல் 35 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
மூன்றாவது போட்டி
மேலும் ஐபில் தொடரின் மூன்றாவது போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
குறித்த போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன.
நாணயசுழட்சியில் வென்ற டெல்லி அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
