உலகப் பொருளாதாரத்திற்கு செக் வைத்த ஈரான்: ஹோர்முஸ் ஜலசந்தியில் புதிய முட்டுக்கட்டை
ஹோர்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கட்டுப்படுத்தப்பட்ட புதிய கடல்சார் வலயம் (Controlled maritime zone) ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை ஈரானின் பெர்சிய வளைகுடா ஜலசந்தி அதிகாரம் (Persian Gulf Strait Authority) அறிவித்துள்ளது.
இதன் மூலம், இந்த விநியோகப் பாதையைக் கடக்கும் கப்பல்கள் இனி முன்கூட்டியே அனுமதி பெற வேண்டியது அவசியமாக்கப்பட்டுள்ளது.
அதிகாரச் சபை
இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், இந்தப் புதிய கட்டுப்பாட்டு வலயமானது ஜலசந்தியின் கிழக்கு நுழைவாயிலில் உள்ள ஈரானின் குஹ்-இ முபாரக் (Kuh-e Mubarak) முதல் ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) புஜைராவுக்கு (Fujairah) தெற்கு பகுதி வரையிலும் மேற்கு நுழைவாயிலில் கெஷ்ம் தீவின் (Qeshm Island) முனையிலிருந்து உம் அல்-குவைன் (Umm al-Quwain) வரையிலும் பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதி வழியிலான எந்தவொரு போக்குவரத்திற்கும் ஈரானிய அதிகாரச் சபையின் ஒருங்கிணைப்பும் அனுமதியும் தேவைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது உலகின் மிக முக்கியமான கடல்சார் வர்த்தகப் பாதைகளில் ஒன்றின் மீது ஈரான் தனது கட்டுப்பாட்டை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதைக் காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |