இரண்டு வாரங்களில் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : தாக்கி அழிக்கப்பட்ட விமானங்கள்
மீண்டும் போர் தொடங்கிய நிலையில் இந்தமாதத்தின் இரண்டு வாரங்களில் மட்டும் 11 அமெரிக்கப் போர் விமானங்களையும் உலங்குவானூர்திகளையும் தரையிலேயே தாக்கி அழித்ததாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவலர் படையின் (IRGC) செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஜூலை 6 முதல் ஜூலை 22 வரையிலான 15 நாள் காலகட்டத்தில் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கு ஏற்பட்ட இழப்பு
பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களில் நிறுத்தப்பட்டிருந்த 11 அமெரிக்கப் போர் விமானங்களையும் உலங்குவானூர்திகளையும் ஈரானிய ஆயுதப் படைகள் தரையிலேயே அழித்ததாக ஜெனரல் ஹொசைன் மொஹெப்பி தஸ்னிம் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் கூறினார்.

ஈரானியத் தாக்குதல்களில், 17 உளவு மற்றும் செயல்பாட்டு ட்ரோன்கள் (அவற்றில் 8 புத்தம் புதிய ட்ரோன்கள்), ஒரு பதுங்குகுழிக்குள் இருந்த F-15 ரக போர் விமானம், ஒரு P8 விமானம், ஒரு C17 போக்குவரத்து விமானம் மற்றும் 8 எரிபொருள் நிரப்பும் விமானங்கள் ஆகியவையும் அழிக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |