கொன்று குவிக்கப்படும் மக்கள்..! அமெரிக்காவுக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்
ஈரானின் வெளியுறவு அமைச்சர் முதன்முறையாக அமெரிக்காவுக்கு நேரடி மிரட்டல் விடுத்திருப்பதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரான் மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்கு முழு சக்தியுடன் பதிலடி கொடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
‛முல்லா கண்டிப்பாக போ' என்ற கோஷத்துடன் ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் போராட்டம்
ஈரானில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவர்களை கைது செய்து சிறையில் அடைக்கும் அரசு கடும் குளிரில் அவர்களை ஆடைகளற்ற நிலையில் சித்ரவதை செய்வதாக பிரிட்டனை சேர்ந்த பத்திரிகை செய்தி வெளியிட்டது.

இதற்கிடையில், அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமை அமைப்பு ஒன்றின் கணக்குப்படி, ஆர்ப்பாட்டங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறைந்தது 4,560 ஆக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஈரானின் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் 3,117 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரானிய அரசாங்கத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறித்து வெளியிடப்பட்ட முதல் அதிகாரபூர்வ அறிவிப்பாக இது அமைந்துள்ளது.
உயிரிழந்தோர் எண்ணிக்கை
இந்த ஆர்ப்பாட்டங்கள் கடந்த ஆண்டு, டிசம்பர் 28ஆம் திகதி தொடங்கியது.

உயிரிழந்தவர்களில் குறைந்தது 2,400 பேர் பொதுமக்களும் பாதுகாப்புப் படையினரும் என அரசு தரப்பு தெரிவித்துள்ளது
மீதமுள்ளவர்களைப் பற்றிய விவரங்களை தொலைக்காட்சி வெளியிடவில்லை.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |