குவைத் மீது சரமாரி தாக்குதல் நடத்திய ஈரான்...!
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினர் (IRGC) குவைத் மீது ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் ஹைமார்ஸ் (HIMARS) ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் அவற்றின் வெடிமருந்து களஞ்சியங்களே இந்தத் தாக்குதலின் இலக்குகளாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் ஃபார்ஸ் (Fars) செய்தி நிறுவனம் இதனை குறிப்பிட்டுள்ளது.
குவைத்தின் பாதுகாப்பு
சில மணிநேரங்களுக்கு முன்னர் குவைத்தின் பாதுகாப்பு ஊடகப் பேச்சாளர் இது குறித்த அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

அதில் நடத்தப்பட்ட ஒரு குற்றவியல் தாக்குதல் காரணமாக மூன்று எல்லை மையங்களும் கடல் கடந்த எண்ணெய் அகழ்வாராய்ச்சி தளம் (Offshore oil drilling platform) ஒன்றும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் இதில் தொழிலாளி ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |