ஐக்கிய அரபு இராச்சியத்தின் எதிரி ஈரான் - யூன் சுக்-யோல் கருத்தால் சர்ச்சை
தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோல் ஈரானை ஐக்கிய அரபு இராச்சியத்தின் "எதிரி" என்று அழைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பாதுகாப்பு அச்சுறுத்தலுக்காக ஐக்கிய அரபு இராச்சியத்தின் தென்கொரியாவை சேர்ந்த பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் தென்கொரிய பாதுகாப்புப் படையினரிடம் நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்ட தென்கொரிய அதிபர் யூன் சு- யோல், ”ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எதிரி ஈரான். மிகவும் அச்சுறுத்தல் கொண்ட நாடு ஈரான். எங்களின் எதிரி வடகொரியா.” என்ற பல கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
நட்பற்ற அணுகுமுறை
இந்த நிலையில் கொரிய பிரதமர் பேச்சுக்கு ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் கொரிய பிரதமர் பேச்சுக்கு விளக்கமாளிக்குமாறு, ஈரானில் உள்ள வெளியுறவு தூதரகத்துக்கு அறிக்கை ஒன்றை அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் நஜாஃபி பேசும்போது, “ தென்கொரியா, ஈரானுடன் "நட்பற்ற அணுகுமுறையை" பின்பற்றுகிறது. தென் கொரிய வங்கிகளில் ஈரானிய நிதிகள் முடக்கப்பட்டிருக்கின்றன.
அமெரிக்கத் தடைகளின் கீழ் முடக்கப்பட்ட எங்கள் நிதியில் 7 பில்லியன் டொலர்களை தென்கொரியா விடுவிக்க வேண்டும் என்று ஈரான் பலமுறை கோரியுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் கருத்து
[G1B9L1E
]
இந்த நிலையில் தென்கொரியா இதற்கு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து தென்கொரியா வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் லிம் பேசும்போது, “அமீரகத்தில் உள்ள தென்கொரிய பாதுகாப்புப் படையினரை ஊக்கப்படுத்துவதற்காகவே அதிபர் அவ்வாறு கருத்துகளை தெரிவித்தார்.
இதில் வேறேதும் இல்லை. இதில் ஈரானுடனான வெளியுறவை விமர்சிக்கவில்லை. ஈரானுடன் உறவுகளை வளர்த்துக் கொள்வதில் அரசாங்கத்தின் விருப்பம் மாறாமல் உள்ளது” என தெரிவித்தார்.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 21 மணி நேரம் முன்
