நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்! ஹோர்முஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஈரான் கடும் நிபந்தனை
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக ஈரான் முன்வைத்துள்ள ஏழு நிபந்தனைகளையும் அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் வரை, முக்கிய கடல்வழிப் பாதை மூடப்பட்டே இருக்கும் என ஈரானின் உயர்மட்டப் பேச்சுவார்த்தையாளரும் நாடாளுமன்ற சபாநாயகருமான முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளார்.
ஈரானின் ராஜதந்திர முன்மொழிவுக்கு அமெரிக்கா பதிலளித்த சில நாட்களுக்குப் பின்னர், வாஷிங்டன் ஒரு மத்தியஸ்தர் ஊடாக சில முன்மொழிவுகளை முன்வைத்ததாக ஈரானிய அரசு ஊடகம் காலிபாஃபை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா காலதாமதம் செய்து ஒருதலைப்பட்சமான கோரிக்கைகளை முன்வைக்கும் காலம் முடிவடைந்துவிட்டது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என காலிபாஃப் தெரிவித்துள்ளார்.
ஈரானின் நிலைப்பாடு
ஈரானின் நிலைப்பாடு தெளிவாகவும் உறுதியாகவும் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இஸ்லாமாபாத் புரிந்துணர்வின் அடிப்படையிலான எங்களது ஏழு நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது என தெரிவித்துள்ளார்.

மேலும், ஈரான் இராணுவ ரீதியாகவும் களத்தில் இருப்பதாகவும், எதிர்காலத்தில் புதிய நடவடிக்கைகளுடன் எதிர்தரப்பை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்தோடு, அமெரிக்காவின் சமீபத்திய முன்மொழிவுகள் குறித்து ஈரான் உற்சாகமடையவோ அல்லது அச்சமடையவோ இல்லை எனத் தெரிவித்த காலிபாஃப், ஈரான் போராடவும் செய்யும்; பேச்சுவார்த்தையும் நடத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |