ஈரான் தூதுவரை அழைத்து அசர்பைஜான் கடும் எச்சரிக்கை!
ஈரானில் இருந்து ஏவப்பட்ட பல ட்ரோன்கள் அசர்பைஜானின் தலைநகரான நக்சிவன் சர்வதேச விமான நிலையத்தை தாக்கியுள்ளன.
குறித்த தாக்குதல் நாட்டின் எல்லைகளில் முன்னெடுக்கப்பட்டதாகவும், அதில் ஒன்று நக்சிவன் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஒரு முனையக் கட்டிடத்தை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
மற்றொன்று ஷகராபாத் கிராமத்தில் உள்ள ஒரு பாடசாலை கட்டிடத்திற்கு அருகில் தரையிறங்கியதாகவும் அஜர்பைஜானின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ட்ரோன் தாக்குதல்
"ஈரான் இஸ்லாமியக் குடியரசின் பிரதேசத்தில் இருந்து நடத்தப்பட்ட இந்த ட்ரோன் தாக்குதல்களை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம்.

இதன் விளைவாக விமான நிலைய கட்டிடம் சேதம் அடைந்தது மற்றும் இரண்டு பொதுமக்கள் காயமடைந்தனர்” என்று வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஈரான் தனது பிரதேசத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாகக் கூறிய அமைச்சகம், ஈரான் நிலைமையை விரைவாக தெளிவுபடுத்தி, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியது.
பொருத்தமான பதிலடி நடவடிக்கைகளை எடுக்க அசர்பைஜான் தரப்புக்கு உரிமை உண்டு என்று அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும், வலுவான எதிர்ப்பை தெரிவிக்க அந்நாட்டிற்கான ஈரானின் தூதரை வரவழைத்ததாகவும் அசர்பைஜான் தரப்பு தெரிவித்துள்ளது.
you may like this
[ZKBCGZZ ]
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |