ஈரான் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி அழிக்கப்படுவாரா..!அழிப்பாரா..!
ஈரானின் புதிய உச்ச தலைவரை தானே தெரிவு செய்வேன் என்று அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சவாலுக்குட்படுத்தும் வகையில் தனது புதிய உச்ச தலைவரை தெரிவு செய்துள்ளது ஈரான்.
மொஜ்தபா கமேனி தான் ஈரானின் அடுத்த உச்ச தலைவர் என தகவல்கள் வெளியானபோது அவரை அந்தப்பதவிக்கு அனுமதிக்கமாட்டேன் என ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
ஈரானின் ஒட்டுமொத்த இராணுவம் மற்றும் நிர்வாகம் என அனைத்தும் உச்சதலைவரின் கட்டுப்பாட்டில்தான் வரும்.
புதிய உச்ச தலைவரின் பதவியேற்பு என்பது ஈரான் முன்னெப்போதும் சந்தித்திராத நெருக்கடியான காலகட்டம்.இந்த நெருக்கடியான காலத்தில் பதவியேற்றுள்ள அவர் ஈரானை நெருக்கடிகளை தகர்த்து நடத்திச் செல்வாரா அல்லது காவு வாங்கப்பட்ட ஈரான் தலைவர்களின் பட்டியலில் இடம்பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
மத்திய கிழக்கில் நிலவும் ஆபத்தின் பரிமாணத்தின் பின்னணியில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பதை விரிவாக ஆராய்கிறது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி….
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |