ஹோர்முஸ் நீரிணை எங்களின் கட்டுப்பாட்டில்...! ஈரானின் அதிரடி அறிவிப்பு
ஈரான் எப்போதும் ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாவலனாகவே இருந்துள்ளது என ஈரானின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அது அப்படியே நீடிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு அமெரிக்கா கட்டணம் விதிக்கும் என ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்தே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை
இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் பதிவொன்றை இட்டுள்ளார்.
POTUS is absolutely right. Whoever provides secure and safe passage of commercial vessels through the Strait of Hormuz should be compensated for this service.
— Seyed Abbas Araghchi (@araghchi) July 13, 2026
Iran has always been the GUARDIAN of the Strait and will remain so FOREVER.
20% is of course too much. We will be fair
குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், “அமெரிக்க ஜனாதிபதி கூறுவது முற்றிலும் சரியானதுதான். ஹோர்முஸ் நீரிணை வழியாக வர்த்தகக் கப்பல்கள் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் செல்வதை உறுதி செய்பவர்களுக்கு அந்தச் சேவைக்கான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் 20% என்பது நிச்சயமாக மிக அதிகம் அத்தோடு நாங்கள் நியாயமாக நடந்து கொள்வோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |