வெளிநாடொன்றில் மூழ்கிய கப்பலில் இருந்து 21 இலங்கையர்களை மீட்டது ஈரான் கடற்படை
Sri Lanka
Iran
By Sumithiran
ஓமான் வளைகுடாவில் மூழ்கிய கப்பல் ஒன்றிலிருந்து 21 இலங்கை பணியாளர்களை மீட்டுள்ளதாக ஈரானிய அதிகாரிகள் கூறியதாக அரச செய்தி நிறுவனமான IRNA தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த கப்பல் குக் தீவுகளின் கொடியின் கீழ் பயணித்த கப்பல் என அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன
ஈரானின் ஜாஸ்க் கடற்கரையிலிருந்து 30 மைல் (50 கிலோமீட்டர்) தொலைவில் புயல் காரணமாக பெயர் குறிப்பிடப்படாத கப்பல் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு எப்போது நடந்தது
ஐந்து பணியாளர்கள் அவசர சேவையிலிருந்து மருத்துவ உதவியைப் பெற்றனர் ஏனையவர்கள் நல்ல உடல் நிலையில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு எப்போது நடந்தது என்று கூறவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்