ஹோர்முஸைக் கட்டுப்படுத்துவதே ஈரானின் முடிவான உத்தி!
ஹோர்முஸை நீரிணையை கட்டுப்படுத்துவதே ஈரானின் முடிவான உத்தி என ஐ.ஆர்.ஜி.சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இதன்படி உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்திற்கான ஒரு முக்கியத் தடைப் பகுதியான ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்படுத்துவதே, இறுதி நகர்வு என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
அமெரிக்காவுடனான போரில் ஈரானுக்கு இது ஒரு சாதகமான நிலை என்றும் ஐ.ஆர்.ஜி.சி விவரித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை
ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்படுத்துவதும், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா மற்றும் வெள்ளை மாளிகையின் ஆதரவாளர்கள் மீது அதன் தடுப்பு விளைவுகளின் தாக்கத்தைத் தக்கவைப்பதும் ஈரானின் திட்டம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் கட்டாயப் பேச்சுவார்த்தைகளிலோ, அழுத்த அச்சுறுத்தல்களுக்கோ, அல்லது முற்றுகைக்கோ ஈரான் உட்படாது என்று அந்நாட்டு ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன், கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்