மத்திய கிழக்கின் நிலை விவாதம்! ஓமானுக்கு விரைந்த அராக்சி
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ஒரு தூதரகக் குழுவிற்குத் தலைமை தாங்கி, ஓமானின் தலைநகரான மஸ்கட்டை சென்றடைந்துள்ளார்.
இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிப்பதற்கும், பிராந்திய நிகழ்வுகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும், அராக்சி ஓமானில் உள்ள மூத்த அதிகாரிகளைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலதிக விவரங்கள் எதையும் வழங்காமல், “ஈரான் மீதான போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு நடைமுறைக்கு உகந்த கட்டமைப்பு குறித்த தனது நாட்டின் நிலைப்பாட்டைப் பகிர்ந்துகொண்டதாக” ஒரு அறிக்கையில் அவர் தெரிவித்த பாகிஸ்தான் பயணத்தைத் தொடர்ந்து இந்த விஜயம் அமைந்துள்ளது.
அமெரிக்காவின் நோக்கங்கள்
அமெரிக்காவின் நோக்கங்கள் குறித்தும் அவர் சந்தேகம் மற்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், "இராஜதந்திரத்தில் அமெரிக்கா உண்மையிலேயே அக்கறை கொண்டுள்ளதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்," என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமீபத்திய இராணுவ மோதல் அதிகரிப்பைத் தொடர்ந்து நிலவி வரும் பதட்டங்களுக்கு மத்தியில், தெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையில் பாகிஸ்தான் ஒரு மத்தியஸ்தராகச் செயல்பட்டு வருகிறது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே எட்டு வாரப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக முடங்கியுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கும் முயற்சிகளுக்கு மத்தியில், அராக்சி வெள்ளிக்கிழமை இரவு பாகிஸ்தான் வந்தடைந்து, சனிக்கிழமை இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்மை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்