போலி அழைப்புகள்! பிரதி அமைச்சரின் பெயரில் பொதுமக்களை ஏமாற்றும் மோசடி...
தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கே அவர்களின் பெயரை பயன்படுத்தி சிலர் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அவரது அலுவலகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெளியிடப்பட்டுள்ள பொது அறிவிப்பின்படி, சில தனிநபர்கள் அல்லது குழுக்கள் பிரதி அமைச்சராக தங்களை அறிமுகப்படுத்தி தொலைபேசி அழைப்புகள் மேற்கொண்டு, பணம் கோருவதோடு பிற மோசடி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவதாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
எந்தவித பணமும் வழங்க வேண்டாம்
இதனால், இவ்வாறான நபர்களுக்கு எந்தவித பணமும் வழங்க வேண்டாம் என்றும், தனிப்பட்ட தகவல்கள் அல்லது ஆவணங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் கிடைத்தால், உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கோ தகவல் வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |