அமெரிக்காவுக்கு உதவும் அண்டை நாடுகளுக்கு ஈரானின் இறுதி எச்சரிக்கை!
அமெரிக்கப் படைகள் தனது நாட்டின் மீது தாக்குதல் நடத்த பிராந்திய நாடுகளின் மண்ணையோ அல்லது ராணுவத் தளங்களையோ பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று அண்டை நாடுகளுக்கு ஈரானின் ராணுவம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மீறி அனுமதித்தால், கடும் பதிலடியை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளது.
அண்டை நாடுகளின் தேசிய இறையாண்மையை மதிப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஈரான் ராணுவம், எந்தவொரு ஆக்கிரமிப்பையும் தங்களால் சகித்துக் கொள்ள முடியாது என்றும், அதற்கு மிகக் கடுமையான முறையில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
ஈரான் ஆயுதப்படைகளின் உறுதி
அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு உதவி செய்பவர்கள் யாராக இருந்தாலும், ஈரானின் ஆயுதப்படைகளான புரட்சிகர காவல் படை மற்றும் ராணுவம் இணைந்து, தாக்குதலுக்குக் காரணமான இடங்களை துல்லியமாக இலக்கு வைக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

அதன்போது தனது இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ள ஈரான், "எங்கள் ஆயுதப்படைகளின் உறுதியையும், எங்கள் மக்களின் சகிப்புத்தன்மையையும் மீண்டும் மீண்டும் சோதித்துப் பார்க்காதீர்கள்" எனத் தெரிவித்து உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |