இன்று நள்ளிரவு முதல் பாண் விலை அதிகரிப்பு!
புதிய இணைப்பு
இன்று (31) நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாயால் உயர்த்த பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்தச் சங்கத்தின் தலைவர் எம். கே. ஜயவர்தன இதனைக் குறிப்பிட்டார்.
கோதுமை மா இறக்குமதி நிறுவனங்கள் அண்மையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 17 ரூபாயால் உயர்த்தியதனைத் தொடர்ந்தே இவ்வாறு பாணின் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே, ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை நுகர்வோருக்கு அநீதி ஏற்படாத வகையில் உயர்த்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
கோதுமை மாவின் விலை உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, பேக்கரி உணவுகளின் விலைகளையும் அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
அந்தவகையில், பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலை மாற்றம் தொடர்பில் இன்றைய தினம் தீர்மானம் எடுக்கப்பட உள்ளது.
குறித்த விடயத்தை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
கோதுமை மாவின் விலை
பிரீமா மற்றும் செரண்டிப் ஆகிய நிறுவனங்கள் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை நேற்றுமுன்தினம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 17 ரூபாவினால் உயர்த்தியுள்ளன.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, கடந்த பெப்ரவரி மாதம் முதல் கப்பல் கட்டணங்கள், காப்பீட்டுக் கட்டணங்கள் மற்றும் தானியங்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதால் இந்த விலைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, மாவின் விலை அதிகரிப்புக்கேற்ப பேக்கரி உற்பத்திகளின் விலைகளை உயர்த்துவது தொடர்பான இறுதி முடிவு இன்று ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
கோதுமா மாவின் விலை உயர்வினைத் தொடர்ந்து ஏற்கனவே சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில் ஓய்வுபெற்ற அதிகாரியின் வீடு புகுந்து தாக்குதல் - பின்னணியில் அரசியல் அழுத்தம்.! NPP உறுப்பினருக்கு உடனடி பிணை
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |