இந்திய பிரதமராகும் எண்ணத்தில் முதல்வர் விஜய்..! உண்மையை உடைக்கும் வைகோ
தமிழக முதல்வர் விஜய்க்கு பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தவெக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும் நிலையில், `முதல்வர் விஜய்தான் அடுத்த பிரதமர்' எனத் தவெகவினர் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், "ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக தவெக ஏற்காவிட்டால் அமைச்சர் பதவியில் இருந்து விலகவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று தவெகவிற்கு அமைச்சர் ராஜேஷ்குமார் கடந்த (30.08.2026) ஆம் திகதி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், எதிர்காலத்தில் பிரதமராகும் நோக்கத்துடன் அரசியலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படும் கருத்துகளுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பதிலளித்துள்ளார்.

அதில், ராகுல் காந்தியை பிரதமராக ஏற்றுக்கொள்ளாவிட்டால் பபதவி விலகல் செய்வோம் என்று அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்ததாக கூறப்படுவது குறித்து வைகோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், தமிழக முதல்வரின் கற்பனையில் கூட இதுபோன்ற கருத்து இருக்காது என்று தெரிவித்தார்.
அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பதை தவிர்த்து பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
அகில இந்திய அளவில் நடைபெறும் தேர்தலில் ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், தொகுதி மறுவரையறை நடவடிக்கை ஜனநாயகத்திற்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்பதால் அதனை கைவிட வேண்டும் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |