கடலில் மூழ்கி மாயமான நால்வரில் மூவரின் சடலங்கள் மீட்பு
புதிய இணைப்பு
பமுணுகம, எபாமுல்ல கடற்கரையில் நீராடச் சென்று காணாமல்போனவர்களுள் பெண் ஒருவரினதும் இரண்டு சிறுமிகளினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், நீரில் மூழ்கி காணாமல்போன 13 வயது சிறுவனைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் 35 வயதுடைய பெண் மற்றும் 04, 12 ஆகிய வயதுடைய இரு சிறுமிகள் ஆவர்.
முதலாம் இணைப்பு
கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த குழுவினருள் பெண் ஒருவர், இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

குறித்த சம்பவம் பமுணுகம - எபாமுல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு காணாமல்போனவர்கள் 35 வயதுடைய பெண், 04 மற்றும் 12 வயதுடைய இரு சிறுமிகள் மற்றும் 13 வயதுடைய ஒரு சிறுவன் ஆவர்.
இவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |