நள்ளிரவு முதல் பெட்ரோல் விலையில் மாற்றம் - வெளியான அறிவிப்பு
உலக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளமையால் இலங்கையிலும் எரிபொருள் விலையைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரிக்கும் போதெல்லாம், அந்தப் சுமையை மக்கள் மீது சுமத்தி எரிபொருள் விலையை உயர்த்தும் அரசாங்கம், உலகச் சந்தையில் விலை குறையும் போது அதன் நன்மையை மக்களுக்கு வழங்கவில்லை என்றும் மக்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைத் திருத்தத்துக்கு இணங்க, தாமும் விலைகளைக் குறைக்கவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி (LIOC) நிறுவனமும் அறிவித்துள்ளது.
பெட்ரோலின் விலை
முன்னதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளைக் திருத்தியமைத்துள்ளது.

அதற்கமைய, ஒரு லீற்றர் ஒக்டென் 92 பெட்ரோலின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டு 399 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
ஒக்டென் 95 பெட்ரோலின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு 475 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கம் நீதித்துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி! அஜித் பி பெரேரா பகிரங்க குற்றச்சாட்டு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |