அரசாங்கம் நீதித்துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி! அஜித் பி பெரேரா பகிரங்க குற்றச்சாட்டு

Ajith Perera Sri Lankan Peoples 22nd Amendment NPP Government
By Dhilak Aug 31, 2026 12:39 AM GMT
Report

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தின் மூலம் அரசாங்கம் நீதித்துறையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றத்தின் அனைத்து 13 நீதியரசர்களும் அடங்கிய முழுமையான அமர்வு உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

05 வயது சிறுவனை தவறான முறைக்கு உட்படுத்திய இளைஞன்! யாழ்.மேல் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

05 வயது சிறுவனை தவறான முறைக்கு உட்படுத்திய இளைஞன்! யாழ்.மேல் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

நீதித்துறையின் சுதந்திரம்

இதன்போது, மேலும் கருத்து வெளியிட்ட அஜித் பி பெரேரா, “நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர், 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கடும் கவலை தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் நீதித்துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி! அஜித் பி பெரேரா பகிரங்க குற்றச்சாட்டு | Govt Is Trying To Take Control Judiciary Ajith P

இத்திருத்தம் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் 14(1) பிரிவுக்கு முரணானது என்றும், பதவியிலிருக்கும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், இத்திருத்தத்தைக் கொண்டுவருவதற்கு முன்னர் எந்தெந்த அமைப்புகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டது மற்றும் ஒட்டுமொத்த நீதித்துறை மறுசீரமைப்புத் திட்டம் என்ன என்பது குறித்து விளக்குமாறு ஐ.நா பிரதிநிதி அரசாங்கத்திடம் கேள்விகளை எழுப்பியிருந்தார்.

ஐ.நாவின் கேள்விகளுக்கு அரசாங்கம் அளித்துள்ள பதில் மிகவும் மோசமானது. முழுமையான நீதித்துறை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாகவே இத்திருத்தம் செய்யப்படுகிறது. இதற்கு 2026 ஜூலையில் அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டதாகவும் அரசு கூறியுள்ளது. 

ஆனால், குறிப்பிட்ட எந்த திகதியும் இல்லாத இந்த அறிக்கை ஒரு அப்பட்டமான பொய்யாகும். அரசாங்கம் இலங்கை மக்களை மட்டுமன்றி சர்வதேச அமைப்பையும் ஏமாற்றப் பார்க்கிறது.” என்றார்.

யாழில் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி! இளைஞனுக்கு 24 வருட சிறை

யாழில் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி! இளைஞனுக்கு 24 வருட சிறை

யாழில் விடுமுறை நாளில் பணிக்கு அழைக்கப்பட்ட பெண் அரச உத்தியோகத்தருக்கு நேர்ந்த துயரம்

யாழில் விடுமுறை நாளில் பணிக்கு அழைக்கப்பட்ட பெண் அரச உத்தியோகத்தருக்கு நேர்ந்த துயரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026