யாழில் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி! இளைஞனுக்கு 24 வருட சிறை
Jaffna
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Theepan
யாழ்ப்பாணத்தில் 14 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த இளைஞனுக்கு 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு 14 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகிய குற்றச்சாட்டில் இளைஞன் கைது செய்யப்பட்டு , சட்டமா அதிபர் திணைக்களத்தால் , யாழ்.மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு , விசாரணைகள் இடம்பெறு வந்தன.
24 வருட சிறைத்தண்டனை
இந்நிலையில் வெள்ளிக்கிழமை குறித்த வழக்கு தீர்ப்புக்காக அழைக்கப்பட்ட போது , எதிரியான இளைஞனை குற்றவாளியாக கண்ட மன்று , இளைஞனுக்கு 24 வருட சிறைத்தண்டனை விதித்தது.

அத்தோடு, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5 இலட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும், நஷ்ட ஈட்டை வழங்க தவறின் மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என மன்று தீர்ப்பளித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டத்தை ஒடுக்குகிறதா அரசு? 7 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்