நாளை இ.போ.ச பேருந்துகள் வழமைபோல் இயங்கும்: வெளியான அறிவிப்பு
இலங்கைப் போக்குவரத்துச் சபையின் (SLTB) பேருந்துகள் வழக்கமான கால அட்டவணைகளுக்கு அமைய வழமைபோல் இயங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் நாளை (30--11-2026) பேருந்துகள் வழமைபோல் இயங்கும்.
இ.போ.ச தலைவர் சஜீவ கனகரத்ன (Sajeeva Kanakaratne) இதனை தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துச் சபை
இதனடிப்படையில் போக்குவரத்துச் சபையின் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளும் நாளை கடமைக்குச் சமூகமளித்து தடையற்ற சேவைகளை உறுதி செய்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

2027 வரவு - செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பல அரச நிறுவனங்களில் நாளை தொழிற்சங்கப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் போக்குவரத்துச் சேவைகளைத் தடையின்றித் தொடர இந்த உறுதிப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு மத்தியில் பொதுப் போக்குவரத்துப் பாதிப்பின்றி இயங்குவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |