டிசம்பரில் இலங்கைக்குப் புதிய விமானச் சேவைகள் : பிரான்ஸ், ரஷ்ய நிறுவனங்கள் களமிறக்கம்
Sri Lanka Airport
Sri Lanka
France
By Sindu
பிரான்சை சேர்ந்த ப்ரெஞ்ச் பீ மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த எஸ்7 ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் அடுத்த மாதம் இலங்கைக்கு விமானச் சேவைகளைத் தொடங்கவுள்ளன.
பிரெஞ்ச் பீ நிறுவனம் டிசம்பர் 19 முதல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) வாரத்திற்கு இரண்டு விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையில், ரஷ்யாவின் எஸ்7 ஏர்லைன்ஸ் நிறுவனம் டிசம்பர் 20 முதல் செர்பியாவிலிருந்து கொழும்புக்கு வாரத்திற்கு இருமுறை நேரடி விமானச் சேவைகளைத் தொடங்க உள்ளது.
சுற்றுலாப் பயணிகள்
இந்தச் சேவைகளின் அறிமுகம், ரஷ்யா மற்றும் ஐரோப்பாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |