மிரிஸ்ஸ கடற்கரையில் 330 கிலோ போதைப்பொருள் மீட்பு : பெண் உட்பட மூவர் கைது
மாத்தறை, மிரிஸ்ஸ – தல்அரம்ப கடற்கரைப் பிரதேசத்தில் நேற்று (28) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் கைப்பற்றப்பட்ட 17 பொதிகளுக்குள் 330 கிலோகிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருள் காணப்பட்டமை தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படைக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில், கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று பிற்பகல் இந்த விசேட நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது போதைப்பொருள் அடங்கியதாகச் சந்தேகிக்கப்பட்ட 17 பொதிகள் கைப்பற்றப்பட்டு மேலதிக சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே, அவற்றில் 400 கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் இருந்தமை உறுதியாகியுள்ளது.
பெண் ஒருவர் கைது
இந்தப் போதைப்பொருள் தொகையைக் கடற்கரைக்குக் கொண்டு வந்ததாகச் சந்தேகிக்கப்படும் படகொன்றும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த போதைப்பொருளைக் கடத்திச் செல்வதற்காக அவ்விடத்திற்கு வந்ததாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு வான்களுடன் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய, இச்சம்பவம் தொடர்பில் மொத்தமாக மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |