இலங்கையின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் வாய்ப்பு வாய்ப்பு அதிகம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அதன்படி இன்று (29) பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் அறிவிக்கபட்டுள்ளது.
இன்று அதிகாலை 05.30 க்கு வெளியிடப்பட்டுள்ள வானிலை அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
அத்துடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காலை வேளையில் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் எனவும் அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |