நாமலை காப்பாற்றும் முயற்சியில் களமிறங்கும் லிமினி: 2029 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் புதிய தகவல்..!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை அரசியல் ரீதியாகப் பாதுகாக்கும் முயற்சிகளில் அவரது மனைவி லிமினி ராஜபக்ச ஈடுபட்டு வருவதாக தென்னிலங்கை அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜபக்ச குடும்பத்துக்கு நெருக்கமான ஒருவர், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதிகள் குழுவுடனான கலந்துரையாடலின்போது இதனைத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் சார்பில் யாரை வேட்பாளராகக் களமிறக்குவது என்பது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, நாமல் ராஜபக்சவை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என கட்சி உறுப்பினர் ஒருவர் முன்மொழிந்துள்ளார்.
ராஜபக்ச குடும்பத்துக்கு நெருக்கமான நபர்
அவ்வாறு நாமலை வேட்பாளராக நிறுத்த முடியாத பட்சத்தில், அவரது மனைவி லிமினி ராஜபக்சவை களமிறக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், லிமினி ராஜபக்ச சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பேசப்படும் நபராக மாறியுள்ளதாகவும், முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுடன் ஒப்பிட்டு அவர் குறித்த கருத்துகள் முன்வைக்கப்படுவதாகவும் அந்தத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
எனினும், லிமினி ராஜபக்சவுக்கு அரசியலில் ஈடுபடும் விருப்பம் இல்லை என ராஜபக்ச குடும்பத்துக்கு நெருக்கமான அந்த நபர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாமலுக்கு ஆதரவாக அவர் சத்தியாக்கிரகப் போராட்டங்களில் ஈடுபடுவதுடன், அனுராதபுரத்துக்குச் சென்று வழிபாடுகளிலும் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
அத்துடன், மகிந்த ராஜபக்ச மற்றும் ஷிரந்தி ராஜபக்ச ஆகியோரை தினமும் சந்தித்து வருவதுடன், தனது பிள்ளைகளுடனும் அதிக நேரத்தைச் செலவிட்டு வருவதாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.
குடும்பத்துக்காகத் தன்னை அர்ப்பணித்து வரும் லிமினி ராஜபக்சவுக்கு தற்போது அரசியல் சிந்தனை இல்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |