ஆப்கானில் பாடசாலை அருகே குண்டுவெடிப்பு : பல மாணவர்கள் பலி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம்
ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான குனாரில் உள்ள அசதாபாத் நகரில், பாடசாலை ஒன்றிற்கு அருகில் நிகழ்ந்த வெடிவிபத்தில் குறைந்தது 10 மாணவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 110 பேர் காயமடைந்தனர் என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்று சனிக்கிழமை காலை சுமார் 10 மணிக்கு (05:30 GMT), அசதாபாத்தின் அண்டர் செர் பகுதியில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளிக்கு அருகிலுள்ள வீட்டில் இந்த வெடிவிபத்து நிகழ்ந்ததாக, குனார் மாகாணத்தின் தகவல் மற்றும் கலாச்சாரத்துறை இயக்குனர் மவ்லவி சாமி-உல்-ஹக், தெரிவித்தார்.
கவனக்குறைவு மற்றும் அலட்சியம்
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, கவனக்குறைவு மற்றும் அலட்சியம் காரணமாகவே இந்த வெடிவிபத்து நிகழ்ந்ததாக உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் முஃப்தி அப்துல் மதீன் கானி தெரிவித்துள்ளார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் உள்ள பள்ளி வளாகம் ஒன்றில் கையெறி குண்டு வீசப்பட்டதில், ஒன்பது முதல் 14 வயதுக்குட்பட்ட 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |