யாழில் தப்பியோடிய 24 வருட சிறை தண்டனைக் கைதி - தீவிர தேடுதல் நடவடிக்கை
யாழ்ப்பாண மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி தப்பியோடியுள்ள நிலையால் அவரை மீள கைது செய்ய விசேட காவல்துறை குழு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
யாழ்ப்பாணம் இளவாலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த 2021ஆம் ஆண்டு தவறான முறைக்கு உட்படுத்திய குற்றத்திற்காக 24 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5 இலட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும், நஷ்ட ஈட்டை வழங்க தவறின் மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்து இருந்தது.
வைத்தியசாலையில் அனுமதி
அந்நிலையில் மறுநாள் சனிக்கிழமை திடீர் சுகவீனம் என கூறி கைதி சிறைக்காவலர்களின் பாதுகாப்புடன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் குறித்த கைதி வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்றுள்ளார்.

கைதி தப்பி சென்ற நிலையில், சிறைக்காவலர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் , யாழ்ப்பாண காவல்துறை விசேட குழுவினரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்
வெள்ளிக்கிழமை தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் , மறுநாள் சனிக்கிழமை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்ட நிலையில் , மறுநாள் ஞாயிற்றுக்கிழமை கைது தப்பி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில் ஓய்வுபெற்ற அதிகாரியின் வீடு புகுந்து தாக்குதல் - பின்னணியில் அரசியல் அழுத்தம்.! NPP உறுப்பினருக்கு உடனடி பிணை
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15