ஹோர்முஸ் நீரிணையை தவிர்ப்பதற்கான திட்டம்! அமெரிக்காவுடன் கைகோர்க்கும் ஈராக் - சிரியா
ஈராக்கின் வடக்கு நகரமான கிர்கூக்கிலிருந்து மத்திய தரைக்கடல் கடற்கரையில் உள்ள சிரியாவின் பனியாஸ் வரை செல்லும் பழைய எண்ணெய்க் குழாயைப் புதுப்பிக்கும் திட்டத்தில் அமெரிக்கா, ஈராக் மற்றும் சிரியாவுடன் இணைந்து புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது.
இது, ஹார்முஸ் நீரிணையை பயன்படுத்தாமலேயே ஈராக் எண்ணெயை ஏற்றுமதி செய்ய வழிவகுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
பல தசாப்தங்களாக மூடப்பட்டு, கடுமையாக சேதமடைந்துள்ள 500-மைல் (800 கி.மீ.) குழாய்வழியை மீண்டும் அமைப்பதற்கான ஒப்பந்தம், அடுத்த வாரம் வெள்ளை மாளிகையில் ஈராக் பிரதமர் அலி அல்-ஜைதிக்கும் ட்ரம்பிற்கும் இடையே நடைபெறும் சந்திப்பின்போது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குழாய்வழி மாற்றம்
மேலும் இந்த குழாய்வழியை முழுவதுமாக மாற்ற வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகும் என்றும் இந்தத் திட்டத்திற்காக அமெரிக்க நிறுவனங்களின் குழு ஒன்று ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |