காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் களவாடப்படும் இரும்பு பொருட்கள்
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையிலுள்ள பழைய இரும்பு பொருட்கள் களவாடப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை தொடர்ந்தும் இயங்க முடியாத நிலையிலுள்ளமையினால் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
1950 ஆம் ஆண்டு வடக்கின் சூரிய உதயமென நிறுவப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இராணுவ பாதுகாப்பு வலயம்
இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றியதுடன் வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக்தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது.
இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன.
காங்கேசன் துறை மயிலிட்டி, தையிட்டி, மாவிட்டபுரம் போன்ற பிரதேசங்களில் இருந்து மக்கள் இடம் பெயர்ந்த காரணத்தினால் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை அண்டிய பிரதேசங்கள் சூனியப்பிரதேசமானதுடன் அதனை சிறிலங்கா இராணுவம் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியது.
மீள புனரமைக்கப்படாத நிலை
பல ஆண்டுகளின் பின்பு அண்மையில் உயர்பாதுகாப்பு வலயங்களின் கீழிருந்த பல பகுதிகள் விடுவிக்கப்பட்டு மக்கள் தமது சொந்த நிலங்களில் குடியேற்றப்பட்ட போதும் சீமெந்து தொழிற்சாலை மீள புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகிறது.
இந்த நிலையிலேயே அங்குள்ள பழைய இரும்புகள் அருகிலுள்ள குடியிருப்பு கிராமங்களினாலும் வெளி நபர்களினாலும் களவாடப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)