ஆப்கானிஸ்தானில் பழங்குடி தலைவர்களின் முயற்சி : சரணடைந்த 50 ஐ.எஸ். பயங்கரவாதிகள்
Afghanistan
terrorists
Taliban
surrender
By MKkamshan
ஆப்கானிஸ்தானில் பழங்குடி தலைவர்களின் முயற்சியால் ஐ.எஸ் பயங்கரவாதிகள் 50 பேர் சரண் அடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் வசம் ஆட்சி அதிகாரம் சென்றுள்ளது. அந்நாட்டின் நங்கார்ஹர் கிழக்கு மாகாணத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் 50 பேர் சரண் அடைந்து உள்ளனர். பழங்குடி தலைவர்களின் முயற்சியால் பயங்கரவாதிகள் சரண் அடைந்தனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அவர்கள் மீண்டும் டேயீஷ் இயக்கத்தில் சேர முயன்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பழங்குடி தலைவர்கள் பயங்கரவாதிகளை எச்சரித்து உள்ளனர்.
கடந்த ஓகஸ்டில் 500 பயங்கரவாதிகள் சரண் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
