இந்திய அரசியல் தலைவரை கொல்ல முயற்சி..! ரஷ்ய புலனாய்வு அமைப்பினரிடம் சிக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி
தீவிரவாதி
ஐ.எஸ் ஐ.எஸ் பயங்கரவாத கும்பலை சேர்ந்த ஒருவரை ரஷ்ய பாதுகாப்புத்துறை கைது செய்துள்ளது.
மத்திய ஆசியா பகுதியை சேர்ந்த குறித்த தீவிரவாதி இந்தியாவின் ஆளுங்கட்சி தலைவர் ஒருவரை, மனித வெடிகுண்டாக மாறி கொலை செய்ய திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் ஐ.எஸ் ஐ.எஸ் தலைவர் ஒருவரால் துருக்கி நாட்டில் தற்கொலைப்படை நபராக இயக்கத்தில் சேர்க்கப்பட்டவர் என தெரியவந்தது.
மனித வெடிகுண்டாக மாறி கொலை
மேலும் இந்த ஆட்சேர்கை நடவடிக்கை டெலிகிராம் மூலமாகவும் பின்னர் இஸ்தான்புலில் சில சந்திப்புகள் மூலமாகவும் நடைபெற்றதாக தெரியவந்துள்ளது.
ரஷ்யாவிற்கு சென்று இந்தியாவிற்கு செல்ல தேவையான ஆவணங்களை பெற்று, இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கை மேற்கொள்ளவதே பிடிப்பட்ட பயங்கரவாதிக்கு கொடுக்கப்பட்ட வேலை என விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
மேலும் இது குறித்து ரஷ்ய பாதுகாப்புதுறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்,
