பிஞ்சு குழந்தைகளின் வெளியான நிழற்படம்: ஈவிரக்கமின்றி தாக்குதல் தொடுக்கும் இஸ்ரேல்
காசாவிலுள்ள 35 ற்கும் அதிகமான வைத்தியசாலைகளில் அரைவாசி செயலிழந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது.
மோதல்களுக்குள் சிக்கியுள்ள வைத்தியசாலைகளில் உள்ள ஊழியர்கள் மற்றும் நோயாளர்களின் பாதுகாப்பு குறித்து பாரிய கரிசனையை வெளியிட்டுள்ளது.
காசா நகரில் உள்ள தமது வைத்தியசாலையின் இதயப் பிரிவு இஸ்ரேலின் தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளதாக அல் ஷிஃபா வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு வழித்தடம்
போதிய மின்சாரம் மற்றும் எரிபொருள் இல்லாத காரணத்தினால் அல் குத்ஸ் மருத்துவமனையும் செயலிழந்துள்ளதாக பலஸ்தீன செம்பிறைச் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அல் ஷிஃபா வைத்தியசாலையில் உள்ள குழந்தைகளை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு இணங்கியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் அல் ஷிஃபா வைத்தியசாலையில் இருந்து தெற்கு நோக்கி இடம்பெயர்வதற்கான பாதுகாப்பு வழித்தடத்தை இஸ்ரேல் அறிவித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவத்தின் அரபு பேச்சாளர் கூறியுள்ளார்.
குழந்தைகள் உயிரிழப்பு
குறித்த வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை பிரிவில் புதிததாக பிறந்த 20 குழந்தைகள் இருக்கும் நிழற்படம் சர்வதேச ஊடகமொன்றுக்கு அனுப்பட்டுள்ளது.
ஏற்கனவே மின்சாரம் இன்றிய காரணத்தினால் உரிய காலத்திற்கு முன்னதாக பிறந்த இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் மருத்துவர்கள் குழுவொன்று கூறியுள்ளது.