அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி செயற்பட்டுள்ள இஸ்ரேல்!
காசாவுக்கான போதிய நிவாரண உதவிகளை வழங்குவதற்கான அமெரிக்கா (US) விதித்திருந்த நிபந்தனையை இஸ்ரேல் (Israel) மீறியதாக பாலஸ்தீன ஐ.நா. அகதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.
குறித்த குற்றச்சாட்டானது, ஐ.நா. அகதிகள் நல அமைப்பின் அவசரக்காலப் பிரிவு தலைவா் லூயிஸ் வாட்டரிஜினால் (Louise Wateridge) செவ்வாயன்று (12) முன்வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் அவர் குறிப்பட்டதாவது, “காசாவுக்கான தேவையான அளவுக்கு அத்தியாவசியப் பொருள்களை அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது.
அமெரிக்காவின் எச்சரிக்கை
எனினும், போதிய நிவாரணப் பொருள்களை இஸ்ரேல் ராணுவம் காசாவிற்குள் அனுமதிக்கவில்லை.
பல மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைவான நிவாரணப் பொருள்களை இஸ்ரேல் ராணுவம் அனுமதிக்கிறது.இதன் மூலம் அமெரிக்காவின் கெடுவை இஸ்ரேல் மீறியுள்ளது” என்றார்.
இவ்வாறானதொரு பின்னணியில், காசாவுக்குள் போதிய நிவாரணப் பொருள்களை இன்னும் 30 நாள்களுக்குள் அனுமதிக்காவிட்டால் இஸ்ரேலுக்கு வழங்கப்படும் இராணுவ உதவிகள் குறைக்கப்படும் என்று அமெரிக்கா கடந்த மாதம் 12 ஆம் திகதி எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |