காசாவில் 1500 ஆண்டுகால கட்டடத்தை தகர்த்தது இஸ்ரேல்
காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் போரால் நாளாந்தம் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தும் பெருமளவானோர் காயமடைந்தும் வருகின்றனர்.
அத்துடன் மக்களின் சொத்துக்களை இஸ்ரேல் இராணுவம் விமானதாக்குதல் மற்றும் எறிகணை தாக்குதல்களால் கட்டட குவியலாக்கி வருகிறது.
1,500 ஆண்டுகள் பழமையான கட்டடம்
இந்த நிலையில் காஸாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கட்டடத்தை இஸ்ரேல் ராணுவம் எறிகணை தாக்குதலால் தகர்த்துள்ளது.
இதன்மூலம் காஸாவில் நூற்றுக்கும் அதிகமான கலாசார கட்டடங்கள் இஸ்ரேல் ராணுவத்தால் சீர்குலைக்கப்பட்டுள்ளதாக காஸா தெரிவித்துள்ளது
இஸ்ரேல் நிதியமைச்சரின் அறிவிப்பு
இதேவேளை காஸாவிலுள்ள மக்கள் அனைவரும் புலம்பெயர்ந்து செல்ல வேண்டும் என இஸ்ரேல் நிதித் துறை அமைச்சர் பெஸாலெல் ஸ்மோட்ரிச் அறிவுறுத்தியுள்ளார்.
காஸாவை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் உள்ளதாகவும், இஸ்ரேல் ,ராணுவ முகாம்கள் அங்கு உருவாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |