ஹமாஸ்-இஸ்ரேல் மோதலுக்கு தீர்வு காண உலகளாவிய ஒற்றுமை அவசியம் : ரணில் விக்ரமசிங்க
உக்கிரமடைந்து வரும் ஹமாஸ்-இஸ்ரேல் மோதலுக்கு தீர்வு காண உலகளாவிய ஒற்றுமையின் அவசியத்தை அதிபர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
இந்து சமுத்திரத்தில் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச ஆராய்ச்சி நிறுவனமான Geopolitical Cartographer கொழும்பு சிட்டி சென்டரில் நேற்று (13) ஏற்பாடு செய்திருந்த மாநாட்டிலேயே அதிபர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மோதல் நிலைமை
"ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான மோதல் நிலைமை குறித்து கருத்து தெரிவித்த அதிபர், அதன் தற்போதைய போக்குகள் உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும் விளக்கமளித்தார்.
பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகளின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ள நிலையிலும், மில்லியனுக்கும் அதிகமான மக்களை காசாவின் தெற்குப் பகுதிச் செல்லுமாறு இஸ்ரேல் விடுத்துள்ள கோரிக்கை உள்ளிட்ட அண்மைக்கால நிலைமைகள் தொடர்பில்அதிபர் விளக்கமளித்தார்.
"மத்திய கிழக்கு நாடுகளும் மற்றைய முஸ்லிம் நாடுகளும் "இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் தான் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் பலர் கூறினர்.
எவ்வாறாயினும் தாக்குதல்கள் தற்போது முடிவுக்கு வந்துள்ளன” என்றார்.