கொழும்பில் அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் வெடித்த போராட்டம்!
இஸ்ரேல் (Israel) இராணுவம் - பலஸ்தீன (Palestine) ஹமாஸ் (Hamas) அமைப்புக்கு இடையேயான போர் உக்கிரமடைந்திருக்கிறது.
காஸாவில் (Gaza) இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் கண்மூடித்தனமான தாக்குதலில் இதுவரை 2,400 குழந்தைகள் உட்பட 6,500 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், உலகின் பல நாடுகள் இஸ்ரேல் பக்கமும் பாலஸ்தீனம் பக்கமும் ஆதரவாகப் பிரிந்து நிற்கும் நிலையில், தொடக்கம் முதலே அமெரிக்கா இஸ்ரேலுக்குத் தனது தார்மிக ஆதரவை வழங்கிவருகிறது.
உச்சபட்சமாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) நேரடியாகவே இஸ்ரேலுக்குச் சென்று அந்த நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் (Benjamin Netanyahu) சந்தித்து தனது உறுதியான ஆதரவை வழங்கியிருக்கிறார்.
இஸ்ரேலைவிடவும் ஒருபடி மேலே சென்று ஹமாஸை மிகக்கடுமையாகச் சாடியிருக்கிறார்.
இந்நிலையில் பலஸதீன இனவழிப்பை நிறுத்துமாறு கோரி இலங்கையில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்றையதினம் (23.12.2024) கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் நடைபெற்றது.
பலஸ்தீனிய சுதந்திரத்திற்கான இயக்கமும்,ஐக்கிய தொழிலாளர் சம்மேளனமும் இணைந்து குறித்த ஆர்ப்பட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |