ஈரானுக்கு எதிரான நடவடிக்கை : விடைபெறப்போகும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பு
ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கை இன்னும் முழுமையடையவில்லை என்று இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சியில் மீண்டும் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஜெருசலேமில் நடைபெற்ற இராணுவ நினைவு நிகழ்ச்சியில் பேசிய காட்ஸ் ஈரான் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஈரான் மீண்டும் அணு ஆயுதங்களைப் பெறுவதற்கான முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. இது இஸ்ரேலின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.
இஸ்ரேல் இராணுவம் தயாராக இருக்க வேண்டும்
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள இஸ்ரேல் இராணுவம் தயாராக இருக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்புக்காக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தயங்கமாட்டோம்.

ஈரானின் நட்பு அமைப்பான ஹிஸ்புல்லா, இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும். காசா, லெபனான் மற்றும் சிரியாவில் உள்ள பாதுகாப்புப் பகுதிகளிலிருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறாது என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |