லெபனானின் 900 ஆண்டுகால கோட்டையை கைப்பற்றியது இஸ்ரேல்
Israel
Lebanon
By Jaso
லெபனானின் முக்கிய நகரமான நபதியா அருகே உள்ள 900 ஆண்டுகள் பழமை யான வரலாற்று சிறப்புமிக்க போபோர்ட் கோட்டையை இஸ்ரேல் இராணுவம் அதிரடியாக கைப்பற்றியுள்ளது.
12ம் நுாற்றாண்டில் சிலுவை போர் காலத்தில் இக்கோட்டை கட்டப்பட்டது. கடந்த 1982ல் லெபனானுடன் நடந்த போரில், இக்கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றி தன் ராணுவ தளமாக பயன்படுத்தி வந்தது.
26 ஆண்டுகளுக்கு பின் கைப்பற்றியது இஸ்ரேல் இராணுவம்
அதன் பின், 2000ம் ஆண்டு இஸ்ரேலிய படைகள் லெபனானில் இருந்து முழுமையாக விலகியபோது, இக்கோட்டையை விட்டு வெளியேறின.

தற்போது, 26 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் அதே கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றி, தன் தேசியக் கொடியை பறக்கவிட்டுள்ளது. இதனால், லெபனானில் போர் சூழல் மேலும் தீவிரமடைந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்