இஸ்ரேல் ஹமாஸ் யுத்தங்களுக்கு மத்தியில் காஸாவில் பரவும் நோய்கள்(படங்கள்)
இஸ்ரேல் ஹமாஸ் யுத்தங்களுக்கு நடுவில் காஸாவில் நோய்கள் அதிகம் பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
குழந்தைகளிடம் மூளைக்காய்ச்சல், சின்னம்மை, மஞ்சள் காமாலை போன்றவையும் அதிகளவில் பதிவாகியுள்ளது.
நவம்பர் 29 முதல் டிசம்பர் 10 வரை 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் வயிற்றுப்போக்கு 66 சதவீதம் அதிகரித்து 59,895 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு ஏனைய மக்களில் 55 சதவீதம் வயிற்றுப்போக்கு அதிகரித்துள்ளதாக WHO தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
காசா மக்களின் அவலம்
இதுவரை இஸ்ரேலின் குண்டுகள் மற்றும் தோட்டாக்களில் இருந்து தப்பிய காசா பகுதி மக்கள் , தங்கள் தற்காலிக தங்குமிடங்களில் கடுமையான குளிர்கால மழை மற்றும் உணவு, குடிநீரின் கடுமையான பற்றாக்குறைக்கு மத்தியில் நோய்களின் பரவலை அதிகளவில் எதிர்கொண்டுள்ளனர்.
நூறாயிரக்கணக்கான மக்கள் கைவிடப்பட்ட கட்டிடங்கள், பள்ளிகள் மற்றும் கூடாரங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் பலர் கழிவறை அல்லது குளிக்க தண்ணீர் வசதியின்றி திறந்த வெளியில் தூங்குவதாக உதவிப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் 10 முதல் WHO புள்ளிவிவரங்களின்படி, காசாவின் 36 மருத்துவமனைகளில் 21மூடப்பட்டுள்ளது, 11மருத்துவமனைகள் ஓரளவு செயல்படுகின்றன மற்றும் 4 மருத்துவமனைகள் குறைந்த அளவு செயல்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |