லெபனான் மீது தரைவழி தாக்குதலுக்கு தயாராகிறது இஸ்ரேல் இராணுவம்
"லெபனானில் தரைவழி நடவடிக்கைக்கு சாத்தியமான பல திட்டங்களைத் தயாரிக்குமாறு" இஸ்ரேலிய இராணுவத் தளபதி ஹெர்சி ஹலேவி, பிரிகேடியர் ஜெனரல் மோஷே சிகோ தாமிருக்கு உத்தரவிட்டுள்ளார்.
"வடக்கில் ஒரு பொதுப் போர் வெடிக்கும் சாத்தியம் இருப்பதால், இஸ்ரேலிய இராணுவம் லெபனானில் தரைவழி நடவடிக்கைக்கான முன்னேற்பாட்டை தயாரித்து வருகிறது" என்று இஸ்ரேலிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
தரை வழி தாக்குதலை தொடங்குவதற்கான திட்டத்தை
“இராணுவத் தளபதி ஹெர்சி ஹலேவி, பிரிகேடியர் ஜெனரல் சிகோ தாமிர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக தரை வழி தாக்குதலை தொடங்குவதற்கான திட்டத்தை வகுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டதாக அந்த ஊடகம் மேலும் கூறியது.
அனடோலு செய்தி நிறுவனத்தின் கூற்றுப்படி, "இஸ்ரேலிய இராணுவத்தின் வடக்குப் படையின் துணைத் தளபதியாக தனது கடைசிப் பதவியில் இருந்தபோது, தாமிர் வடக்குப் பகுதியில் சிறந்த அனுபவத்தைப் பெற்றிருந்தார்" என்று சுட்டிக்காட்டியுள்ளது.
ஹிஸ்புல்லாவை பின்னோக்கி தள்ளுவதை நோக்கமாகக் கொண்ட
"எல்லையிலிருந்து எட்டு முதல் 10 கிலோமீட்டர் தொலைவிற்கு ஹிஸ்புல்லாவை பின்னோக்கி தள்ளுவதை நோக்கமாகக் கொண்ட வரையறுக்கப்பட்ட நுழைவு உட்பட பல்வேறு நோக்கங்களின் பல ஊடுருவல் திட்டங்களை தாமிர் உருவாக்குவார்," என்று ஊடகம் கூறியது.
எனினும், மார்ச் 15 அன்று இஸ்ரேலிய இராணுவம் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக தாக்குதலை மேற்கொள்ளும் என்று கூறப்படும் வதந்திகள் இராணுவத்தால் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த அறிக்கை குறித்து இஸ்ரேல் இராணுவம் அதிகாரபூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |