லெபனானை இலக்கு வைத்த இஸ்ரேலிய தாக்குதல்! பேச்சுவார்த்தைக்கு விடுக்கப்பட்ட அழைப்பு
இஸ்ரேலுடன் நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க இரு தரப்புக்களுக்குமிடையே விசேட பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுக்கவேண்டும் என லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன் தெரிவித்துள்ளார்.
மேலும், காஸா போர் எந்த நேர்மறையான முடிவுகளுக்கும் வழிவகுக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த குறித்த போரில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்திருந்தார்.
பாலஸ்தீனிய அமைப்பு
இந்நிலையில் “இரு நாடுகளுக்கும் இடையே உள்ள சிக்கல்கள் தொடர்பில் ஜோசப் அவுன் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த போரில் பாலஸ்தீனிய அமைப்பான ஹமாஸ் ஒக்டோபர் 7, 2023 அன்று தெற்கு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி 1,200 பேரைக் கொன்று 251 பேரை பணயக்கைதிகளாகப் பிடித்து சென்றது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கிய ஒரு நாளுக்குப் பிறகு, லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு, காசாவிற்கு ஒரு காப்புப் படை என்று அழைக்கப்படும் எல்லையில் உள்ள இஸ்ரேலிய இராணுவ நிலைகளைத் தாக்கத் தொடங்கியது.
ஹிஸ்புல்லா மோதல் கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து முழு அளவிலான சண்டையாக தீவிரமடைந்தது.
லெபனான் குழு
இதன் போது லெபனான் குழு பெரும் இழப்புகளைச் சந்தித்தது. மற்றும் அதன் அரசியல் மற்றும் இராணுவத் தளபதிகள் பலர் கொல்லப்பட்டனர்.
14 மாத இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போர் நவம்பரில் அமெரிக்க மத்தியஸ்தத்துடன் முடிவடைந்ததிலிருந்து, இஸ்ரேல் லெபனான் மீது கிட்டத்தட்ட தினசரி வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மத்தியஸ்தத்துடன் லெபனான் கடந்த காலங்களில் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளுக்கும் இடையே 2022 ஆம் ஆண்டு கடல் எல்லை ஒப்பந்தத்திற்கு வழிவகுத்தன” என அவுன் கூறியுள்ளார்.
மேலும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை அடைவதற்கான பேச்சுவார்த்தைகளை நோக்கி நிலைமைகள் நகர்கின்றன என்று அவுன் தெரிவித்துள்ளார். எனவே, உரையாடல் மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகளை எட்ட முடியும் என்று நாங்கள் கூறுகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு 10 மணி நேரம் முன்
