24 மணிநேரத்தில் இரண்டாவது முறையாக அல்-ஷிஃபா மருத்துவமனை மீது தாக்குதல்
இஸ்ரேலிய படைகள் காசா நகருக்கு மேற்கே உள்ள அல்-ஷிஃபா மருத்துவ வளாகத்தின் மீது 24 மணி நேரத்தில் இரண்டாவது முறையாகத் தாக்கிய பின்னர், அதன் உள்ளேயே இருந்ததாக பாலஸ்தீன அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான WAFA தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய புல்டோசர்கள் மற்றும் டாங்கிகள் மருத்துவ வளாகத்தை அதன் மேற்கு நுழைவாயிலில் இருந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக உள்ளூர் வட்டாரங்கள் WAFA இடம் தெரிவித்தன.
மருத்துவமனையை இராணுவ டாங்கிகளுடன் சுற்றி வளைத்து
இஸ்ரேலிய படையினர் கடந்த ஒரு வாரமாக அல்-ஷிஃபா மருத்துவமனையை இராணுவ டாங்கிகளுடன் சுற்றி வளைத்து வருகின்றன. புதன்கிழமை இரவு, இஸ்ரேலிய படைகள் அல்-ஷிஃபா மருத்துவ வளாகத்திற்குள் இருந்து அதிகாலைவேளை அங்கிருந்து வெளியேறின.
எனினும், அல்-ஷிஃபா வைத்தியசாலைக்குள் இருந்து செய்திகளை வழங்கும் WAFA நிருபர், இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் குறி பார்த்து சுடும் வீரர்கள் சுற்றியுள்ள கட்டடங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர், கூடுதலாக ட்ரோன்கள் தொடர்ந்து மேலே பறக்கின்றன என தெரிவித்துள்ளார்.
நோயாளிகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் இருந்த புதிய அறுவை சிகிச்சை கட்டடம் மற்றும் அவசரகால கட்டடத்தை இஸ்ரேலிய படைகள் தாக்கியதாக செய்தியாளர் தெரிவித்தார்.
கதவுகளை வெடிக்கச் செய்து
மருத்துவமனை திணைக்களங்கள் மீதான சோதனைகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டன மற்றும் இராணுவம் திணைக்களங்களுக்கு இடையிலான கதவுகளை வெடிக்கச் செய்தது, அதே நேரத்தில் மருத்துவ வளாகத்தில் உள்ள அனைவரையும் அதன் கிழக்கு முற்றத்தின் மையத்தில் ஒன்றுகூடுமாறு உத்தரவிட்டதாக நிருபர் கூறினார்.
ஆடைகளை களையுமாறு கட்டாயப்படுத்தி சோதனை
மருத்துவமனை முற்றத்தில் இஸ்ரேலிய இராணுவம் முக அடையாளம் காணும் கமெராக்கள் மற்றும் இலத்திரனியல் வாயில்களை வைத்ததாகவும், இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் ஆடைகளை கழற்றுமாறு கட்டாயப்படுத்தி அவர்களை தடுத்து வைத்ததாகவும், மருத்துவர்கள், நோயாளிகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களை விசாரணைக்கு உட்படுத்தியதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.
இஸ்ரேலியப் படைகள் பல இடம்பெயர்ந்த நபர்களையும், கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினரையும் கைது செய்து, அவர்களை விசாரித்து, சித்திரவதை செய்து, அவர்களை பல மணிநேரம் முற்றங்களில் தடுத்து வைத்தனர். இன்னும் முற்றத்தில் உள்ள இறந்தவர்களை அடக்கம் செய்வதையும் தடுத்து வருவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.