அப்பாவி மக்களை கொலை செய்யும் இஸ்ரேல்; சர்வதேச அமைப்பு கண்டனம்
அல்ஷிபா மருத்துவமனை மீது தொடர் தாக்குதலை மேற்கொள்ளும் இஸ்ரேல், அங்குள்ள அப்பாவி மக்களை செய்வதாக எல்லைகள் அற்ற மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையிலான போர் 36-வது நாளாக நீடித்து கொண்டிருக்கிறது.
காசாமீது இஸ்ரேல், வான், கடல், தரைவழி என மும்முனை தாக்குதல் நடத்திவருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
நேரடி துப்பாக்கி பிரயோகம்
இந்தநிலையில், அல்ஷிபா மருத்துவமனையிலிருந்து வெளியே செல்லமுயற்சிப்பவர்கள் மீது இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்கின்றனர் என எல்லைகள் அற்ற மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த தகவலை வெளியிடும் இந்த தருணத்தில் மருத்துவமனையிலிருந்து வெளியே செல்ல முயல்பவர்கள் இஸ்ரேலிய படையினரால் சுடப்படுவதை எங்கள் பணியாளர்கள் பார்க்கின்றனர் என எல்லைகள் அற்ற மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
அல்குட் மருத்துவமனையிலிருந்து 20 மீற்றர் தொலைவில் இஸ்ரேலிய டாங்கிகள் காணப்படுகின்றன என செம்பிறைச்சங்கம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனையை நோக்கி நேரடி துப்பாக்கி பிரயோகம் இடம்பெறுகின்றது இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் அச்சமும் பதற்றமும் காணப்படுகின்றது.