இஸ்லாமிய அமைப்புகளின் முடிவு இது தான்..! ஹமாஸுக்கு அழைப்பு விடுத்த நெதன்யாகு (காணொளி)
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் இரண்டு மாதங்களாக ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்றுள்ள நிலையில், ஹமாஸ் அமைப்பை சரணடைய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து நெதன்யாகு தெரிவிக்கையில், "போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆனால் ஹமாஸ் அமைப்பின் அழிவு துவங்கிவிட்டது.
இது பாலஸ்தீன இஸ்லாமிய அமைப்புகளின் முடிவு. எல்லாம் முடிந்துவிட்டது, உங்கள் தலைவன் சின்வாருக்காக நீங்கள் உயிரை விட வேண்டாம். சரணடைந்துவிடுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் இராணுவம்
இவ்வாறான சூழலில், சில ஹமாஸ் தீவிரவாதிகள் சரணடைந்துள்ளதாக நெதன்யாகு தெரிவித்துள்ள நிலையில், இஸ்ரேல் இராணுவம் அதற்கான எந்த சான்றையும் வெளியிடவில்லை. ஹமாஸ் அமைப்பு யாரும் சரணடையவில்லை எனத் தெரிவித்துள்ளது.
இதுவரை 17,700-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை இஸ்ரேல் இராணுவம் கொன்றுள்ளது. 100-க்கும் மேற்பட்ட கோயில்களை தரைமட்டமாக்கியுள்ளது. அதேவேளை, பள்ளிகள், மருத்துவமனைகளில் தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Prime Minister Netanyahu:
— Prime Minister of Israel (@IsraeliPM) December 10, 2023
"In the past few days, dozens of Hamas terrorists have surrendered to our forces. They are laying down their weapons and turning themselves in to our heroic soldiers. pic.twitter.com/OOY7vAPMbG
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |