இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலின் மத்தியில் திறக்கபட்ட ராஃபா எல்லை!
இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலானது தொடர்ந்து வரும் நிலையில் மூடப்பட்டிருந்த ராஃபா எல்லை தற்போது திறக்கப்பட்டுள்ளது.
கடந்த 7ம் திகதி ஆரம்பமான இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலானது 27 நாட்களாக தொடர்கிறது. இந்த தாக்குதலில் 9000ற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதோடு 20,000ற்கும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களும், காசாவில் இருக்கும் வெளிநாட்டு மக்களும் வெளியேற முடியாமல் இருக்கும் நிலையில் நேற்று(1) ராஃபா எல்லை திறக்கப்பட்டுள்ளது.
ராஃபா எல்லை
எகிப்துக்கும் பலஸ்தீனத்தின் காசாவுக்கும் எல்லைப் பகுதியாக ராஃபா அமைந்துள்ளது. போரிலிருந்து தப்பிப்பதற்காக மக்கள் காசாவிலிருந்து வெளியேறி எகிப்துக்குள் நுழைய திட்டமிட்ட நிலையில், எகிப்து அரசு ராஃபா எல்லையை மூடியது.
அதன் பிறகு, ராஃபா எல்லை வழியாக காசாவுக்குள் அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு செல்வதற்கு மட்டும் எகிப்து அனுமதி வழங்கியது.
காசாவிலிருந்து மக்கள் எகிப்துக்குள் நுழைய அனுமதி மறுக்கபட்டிருந்தது.
இந்நிலையில், அமெரிக்கா, கத்தார் ஆகிய நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து தற்காலிகமாக ராஃபா எல்லையை எகிப்து திறந்துள்ளது.
அனுமதி
இரட்டை குடியுரிமை, வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருக்கும் நூற்றுக்கணக்கானோர் மற்றும் பலத்த காயம் அடைந்தோர், எல்லை வழியாக வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.