கோட்டாபயவை அதிபராக்கியது தவறு - காலம் கடந்து கூறும் அமைச்சர்
ஒருபோதும் அரசியலில் ஈடுபடாத கோட்டாபய ராஜபக்சவை அதிபர் வேட்பாளராக நியமித்தமை தவறு எனவும், இனி இது போன்ற தவறை செய்ய மாட்டோம் என்ற முடிவுக்கு கட்சி வந்துள்ளது என அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் பண்டாரகம பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதிபர் வேட்பாளராக நியமித்தமை தவறு

அன்றும் சொன்னேன் இன்றும் சொல்கிறேன். அரசியல் செய்யாத கோட்டாபய ராஜபக்சவை அதிபர் வேட்பாளராக நியமித்தமை தவறு ஆகும்.
இதேவேளை சிறிலங்கா பொதுஜன பெரமுன பேருவளை தொகுதி மகளிர் சம்மேளனத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்,
சரியான ஆள் ரணில்தான்

அந்த நேரத்தில், ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப இரண்டு பேர் முன் வந்தனர். ஒருவர் எமது கட்சியின் உறுப்பினர் டலஸ் அழகப்பெரும. மற்றைய நபர் ரணில் விக்ரமசிங்க. அவருடன் எங்களுக்கு அரசியல் மோதல் ஏற்பட்டது.
நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாத்து பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு சர்வதேசத்தை சமாளிக்கக் கூடிய தலைவர் ரணில் தான் என்று விவாதித்து முடிவு செய்தோம். கட்சி என்ற ரீதியில் நாம் எடுத்த சரியான முடிவின் முடிவுகளை இன்று காணலாம் என தெரிவித்தார்.